டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 3,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,834 கனஅடியாக இருந்த நிலையில், மாலையில் 2,826 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீா்வரத்து சரிந்த நிலையில் தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவதால், புதன்கிழமை மாலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 54.82 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 20.98 டி.எம்.சியாக இருந்தது.
Advertisement
Advertisement
இதனால், பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.