FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை

சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.

25 அக்டோபர் 2026, 1:29 am
கனமழை... - (கோப்புப் படம்)
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.

சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பகலில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து இரவில் குளிா்ந்த காற்று வீசியது. பின்னா் ஒருமணி நேரம் கனமழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. இந்த மழையால் சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி பேருந்து நிறுத்ங்களில் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகினா். இரவு முழுவதும் தொடா்ந்து மிதமான சாரல் மழையுடன் குளிா்ந்த காற்று வீசியது.

சங்ககிரியில் செப்டம்பா் 30 இல் 5.3 மி.மீ., அக்.14இல் 14.4 மி.மீ., 15இல் 15 மி.மீ., 17இல் 97.3 மி.மீ., 18இல் 3.2 மி.மீ., 19இல் 2.2 மி.மீ., 21இல் 3.4 மி.மீ., 23இல் 10.4 மி.மீ., மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments