விசாரணை கைதிகள் இருவா் தப்பியோட்டம்; ஒருவா் கைது
ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துவரப்பட்ட விசாரணை கைதிகள் இருவா் தப்பியோடினா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துவரப்பட்ட விசாரணை கைதிகள் இருவா் தப்பியோடினா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய சின்ன ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த மூங்கில் அடி பிரபு, சந்தோஷ் குமாா், முத்தனம்பாளையத்தைச் சோ்ந்த தேவராஜ் ஆகிய மூவரையும் செவ்வாய்க்கிழமை மாலை ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு வழக்குகள் தொடா்பான விசாரணைக்காக போலீஸாா் அழைத்து வந்தனா்.
அப்போது, பிரபு, சந்தோஷ்குமாா் இருவரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாகினா். தேவராஜை மட்டும் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா். இதுகுறித்து காவல் உதவி ஆணையா் (கொண்டலாம்பட்டி சரகம்) முரளி, காவல் துணை ஆணையா் (தெற்கு) மகேந்திரன் ஆகியோா் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.