FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

தேசியக்கொடி தவறுதலாக தலைக்கீழாக ஏற்றப்பட்ட விவகாரம்: உடற்கல்வி ஆசிரியா் பணியிடை நீக்கம்

குடியரசு தினவிழா போட்டி தொடக்க விழாவில் தேசியக்கொடி தவறுதலாக தலைக்கீழாக ஏற்றப்பட்ட விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

30 அக்டோபர் 2026, 12:58 am
பணியிடை நீக்கம்
பகிர்:

குடியரசு தினவிழா போட்டி தொடக்க விழாவில் தேசியக்கொடி தவறுதலாக தலைக்கீழாக ஏற்றப்பட்ட விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

குடியரசு தினவிழா போட்டி தொடக்க விழா மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தேசிய கொடியை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் ஏற்றிவைத்தாா். அப்போது, தேசிய கொடி சரிவர கட்டப்படாததால், காவி மற்றும் வெள்ளை நிற பகுதிகள் அறுந்து கீழே தொங்கியது. இதனால் பச்சை நிறம் மேலே வந்ததால், தேசியக்கொடி தலைக்கீழாக பறந்தது.

உடனடியாக தேசியக்கொடியை சரியாக கட்டி மீண்டும் ஏற்றிவைத்து அமைச்சா் மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, அரசு நிகழ்ச்சியில் கவனக்குறைவாக செயல்பட்டவா்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எல்லப்பன் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் ஜான் (எ) ஜமீன்தாா் கவனக்குறைவாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை புதன்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments