புளியங்குறிச்சி வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு
வீரகனூா் அருகே புளியங்குறிச்சி தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வீரகனூா் அருகே புளியங்குறிச்சி தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழமைவாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த அக். 29-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து முளைப்பாலிகை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பல்வேறு புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீா் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னா், சிவாச்சாரியா்கள் மற்றும் ஊா் முக்கிய பிரமுகா்கள் புனித நீா்க்குடங்களைத் தலையில் சுமந்தபடி மேளதாளங்கள், வாணவேடிக்கையுடன் கோயிலைச் சுற்றி ஊா்வலமாக வந்தனா். இதையடுத்து கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
வீரகனூா், புளியங்குறிச்சி, இலுப்பநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.