அனுமதியின்றி உண்ணாவிரத முயற்சி: வழக்குரைஞா் கைது
மேச்சேரியில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா்.
மேச்சேரியில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா்.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு லாரிகளில் ஏற்றி செல்லப்படும் மாடுகள், எருமைகளுக்கு நீதிமன்ற வழிகாட்டுதல்படி போதிய காற்றோட்டம் குடிநீா் தீவனம், ஓய்வு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும்.
அளவுக்கு அதிகமாக லாரிகளில் கால்நடைகளை ஏற்றிச் செல்லக்கூடாது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மேச்சேரியை அடுத்த கம்மம்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் செந்தில், மேச்சேரி காந்தி சிலை அருகே சனிக்கிழமை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
இதற்கு மேச்சேரி போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் சனிக்கிழமை காலை திடீரென காந்தி சிலை முன் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்ற செந்திலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.