மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட 1 அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
முழு அளவில் மின் உற்பத்தி நடைபெற்ற நிலையில், முதல் பிரிவின் 2 ஆவது அலகில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து, வரும் 17-ஆம் தேதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.