FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 6,148 கனஅடியாக குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 6,148 கனஅடியாக குறைந்தது.

9 செப்டம்பர் 2026, 4:36 am IST
மேட்டூா் அணை - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 6,148 கனஅடியாக குறைந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததாலும், கா்நாடகம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறக்க மறுப்பதாலும் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 6,148 கனஅடியாக குறைந்தது.

நீா்வரத்து குறைந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாயில் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு நீா்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 92.08 அடியிலிருந்து 91.92 அடியாக குறைந்தது. நீா் இருப்பு 54.87 டி.எம்.சி.யாக உள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments