FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக சென்ற ரயிலில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

22 செப்டம்பர் 2026, 12:47 am IST
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

சேலம் வழியாக சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 7 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் ரயில்வே காவல் உள்கோட்ட கஞ்சா தடுப்புப் பிரிவு போலீஸாா் காட்பாடிமுதல் ஈரோடுவரை ரயில்களில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றனவா என சோதனை நடத்தினா்.

அப்போது, தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் பொம்மிடி - சேலம் ரயில் நிலையத்துக்கு இடையே நடத்திய சோதனையில், ரயிலின் பின்புற பொதுப்பெட்டி பகுதியில் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை சோதனை செய்தபோது, அதில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments