FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலவச கண் சிகிச்சை முகாம்

கொடைக்கானலில் இலவச கண் சிகிச்சை முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கொடைக்கானலில் இலவச கண் சிகிச்சை முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

 சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் அரசு தலைமை மருத்துவமனை, சுரபி கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த இந்த மருத்துவ முகாமை கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் எட்வர்ட், மறை வட்ட அதிபர் எரோணிமுஸ், நிர்வாக செயலர் முகமது சலீம், மாநிலத் தலைவர் முகமது சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொடைக்கானல் அரசு மருத்துவமனை துணை இயக்குனர் பாலாஜி வரவேற்றார். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவர் ரவீந்திரன், கண் மருத்துவர் சுனிதா தலைமையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சிகிச்சைக்கான பரிசோதனை நடத்தினர்.

Advertisement

Advertisement

 இந்த முகாமில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு அங்கு லேசர் கேட்ரட் அறுவை சிகிச்சை இலவசமாக நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments