FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுக தெருமுனைப் பிரசாரம்

நத்தம்  ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில், நமக்கு நாமே சுற்றுப்பயண விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

நத்தம்  ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில், நமக்கு நாமே சுற்றுப்பயண விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

  இந்த தெருமுனைப் பிரசாரக் கூட்டம் பரளி, வத்திபட்டி, சமுத்திராபட்டி, மணக்காட்டுர், செந்துறை, நத்தம் பேருந்து நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் நடந்தன.   திமுக பொருளாளர்  மு.க. ஸ்டாலின் நத்தம் பகுதிக்கு வருவதையொட்டி முன்னேற்பாடாக நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு, தெற்கு ஒன்றியச் செயலர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். பொதுக் குழு உறுப்பினர் ராஜ்மோகன், நகரச் செயலர் முத்துக்குமாரசாமி, ஆண்டிஅம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றியச் செயலர் வெள்ளைச்சாமி வரவேற்றார். இதில், ஒன்றிய, நகரக் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments