பணத்தை திருட முயன்ற திருச்சி சிறுவன் கைது
நூதன முறையில் பணத்தை திருட முயன்ற திருச்சி சிறுவனை, பொதுமக்கள் பிடித்து வடமதுரை போலீஸில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
நூதன முறையில் பணத்தை திருட முயன்ற திருச்சி சிறுவனை, பொதுமக்கள் பிடித்து வடமதுரை போலீஸில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்துள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் சி.வீரச்சாமி. இவர் திங்கள்கிழமை அய்யலூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ.35ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது பைக்கில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் அவரது கவனத்தை திசை திருப்புவதற்காக 10 ரூபாய் நோட்டை வீசினான். அதை எடுக்க அவர் முயன்ற போது பைக் பெட்டியில் இருந்த ரூ.35 ஆயிரம் இருந்த பையை எடுத்துக் கொண்டு ஓட முயன்றான். இதைப் பார்த்த வீராச்சாமி பணப்பையை அவனிடம் இருந்து பறித்துள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், தப்பியோட முயன்ற சிறுவனை பிடித்து, வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த சிறுவன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் பார்த்தசாரதி (17) எனத் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.