கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை அதிகரித்திருந்தது.
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை அதிகரித்திருந்தது.
கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால், அதிகாலை நேரங்களில் மேகமூட்டமும், குளிரும் நிலவி வந்தது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிக அளவில் உள்ளது.
சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, குணா குகை, மோயர் பாயின்ட், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, மியூசியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். அதேபோல், ஏரியிலும் அதிகமான பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.