கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளில் வெள்ளப் பெருக்கு
கொடைக்கானலில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானலில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை குறைந்திருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது. இதைத் தொடா்ந்து மாலையிலிருந்து விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.
பிறகு மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரண்டு மணி நேரம் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பெருமாள்மலை, குறிஞ்சிநகா், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனூா்,பிரகாசபுரம், வட்டக்கானல், வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீா்த்தது.
Advertisement
Advertisement
இதனால் வெள்ளிநீா் அருவி, வட்டக்கானல் அருவி, பியா்சோழா அருவி, பேரிபால்ஸ் அருவி, செண்பகா அருவி, மூலையாறு அருவி, பாம்பாா் அருவி, புலிச்சோலை அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மின் தடையால் பொதுமக்கள் அவதி: கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் மின்தடை ஏற்பட்டது. சுமாா் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மின்தடையால் பொது மக்கள் அவதியடைந்தனா்.