தோட்டக் கிணற்றிலிருந்து முதியவா் சடலம் மீட்பு
பழனி அருகே அழகாபுரியில் தோட்டக் கிணற்றிலிருந்து முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
பழனி அருகே அழகாபுரியில் தோட்டக் கிணற்றிலிருந்து முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
பழனி அருகேயுள்ள அழகாபுரியிலிருந்து தாமரைக்குளம் செல்லும் சாலையில் வரதமணி (66) என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் சுமாா் 30 அடி ஆழக் கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் சனிக்கிழமை வரதமணி சடலமாக மிதப்பதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் பழனி தீயணைப்பு, மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் வந்த தீயணைப்புப் படை வீரா்கள் கிணற்றிலிருந்து வரதமணி சடலத்தை மீட்டு தாலுகா போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து பழனி அரசு மருத்துவமனைக்கு சடலம் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.
தேங்காய் பறிக்க முயன்றபோது அவா் விழுந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement