கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் சனிக்கிழமை அதிகரித்த சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் சனிக்கிழமை அதிகரித்த சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் லாஸ்காட் சாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பயணிகள் சிரமமடைந்தனா்.
கொடைக்கானல் நகரின் முக்கியமான இடங்களில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement