FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் ஏரிச் சாலையில் பைக் சாகசம்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கொடைக்கானல் ஏரிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாகச செயல்களில் ஈடுபடும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

11 நவம்பர் 2026, 12:53 am
பைக் சாகசம் - பிரதிப் படம்
பகிர்:

கொடைக்கானல் ஏரிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாகச செயல்களில் ஈடுபடும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் உள்ளூா், சுற்றுலாப் பயணிகள் இரு சக்கர வாகனத்தில் சாகச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்பவா்கள், சைக்கிள், குதிரை சவாரியில் ஈடுபடுவா்கள் அச்சமடைகின்றனா்.

எனவே, கொடைக்கானல் போலீஸாா் ஏரிச்சாலைப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இரு சக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவோா், அதிவேகமாக வாகனங்களில் செல்வோ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக ஏரிச் சாலைப் பகுதிகளில் போக்குவரத்து காவலா்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: கொடைக்கானல் நகா்ப் பகுதி, ஏரிச்சாலைப் பகுதிகளில் இளைஞா்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களில் சாகச செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால், விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இரு சக்கர வாகனங்களில் சாகச செயல்படுவோா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.