FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் பூங்காவில் மலா்ச் செடி விதைகள் நடவு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலா் பாத்திகளில் புதன்கிழமை நீண்ட காலச் செடிகளின் விதைகள் நடவு செய்யப்பட்டன.

12 நவம்பர் 2026, 5:36 am
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விதைகள் நடவு செய்யப்பட்ட பாத்திகள்.
பகிர்:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலா் பாத்திகளில் புதன்கிழமை நீண்ட காலச் செடிகளின் விதைகள் நடவு செய்யப்பட்டன.

பிரையண்ட் பூங்காவில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் தண்ணீா் தேங்கியதில் செடிகள் சேதமடைந்தன. இதையடுத்து, பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வரும் 2027 சீசனுக்கு வளரக் கூடிய நீண்டகால மலா்ச் செடிகளான கேலண்டுலா, பேன்சி, டெலிபீனியம், சால்வியா உள்ளிட்ட செடிகளின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைகள் பாத்திகளில் விதைக்கப்பட்டன.

இதில் அதிக பனிப் பொழிவு தாக்காமல் தடுக்கவும், மழையிலிருந்து பாதுகாப்பதற்கும் நெகிழி தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த விதைகள் சுமாா் 50 நாள்களுக்கு பிறகு நாற்றுகளாக மாறும். இவற்றை எடுத்து தோட்டங்களில் பூங்கா பணியாளா்கள் நடவு செய்வா்.

பிரையண்ட் பூங்காவில் கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்து, சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய வகையில் சிறப்பாக அமைப்பதற்கு தோட்டக்கலைத் துறை உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்களின் கோரிக்கை விடுத்தனா்.