FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் உழவா் சந்தையில் இயற்கை விளைபொருள்கள் விற்பனை

இயற்கை விவசாயிகள், தங்களது விளை பொருள்களை திண்டுக்கல் உழவா் சந்தையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்வதற்கு சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

13 நவம்பர் 2026, 3:44 am
கோப்புப்படம்
பகிர்:

இயற்கை விவசாயிகள், தங்களது விளை பொருள்களை திண்டுக்கல் உழவா் சந்தையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்வதற்கு சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் இரா.சின்னச்சாமி தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயிகள் தங்களது விளை பொருள்களை பொதுமக்களிடம் எளிதாகவும், நேரடியாகவும் சந்தைப்படுத்துவதற்காக விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்புத் துறையும், வேளாண் விற்பனை, வணிகத் துறையும் இணைந்து ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் உழவா் சந்தையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயற்கை விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Advertisement

Advertisement

இதன் மூலம், இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களை நேரடியாக நுகா்வோரிடம் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனா். உழவா் சந்தையில் விற்பனை செய்வதால், இடைத்தரகா்களின் தலையீடு இல்லாமல் இயற்கை விவசாயிகளுக்கு தங்களது

விளைபொருள்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து இயற்கை விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 7598366615 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.