கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகம்
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள செண்பகனூா், வில்பட்டி, பள்ளங்கி, மாட்டுப்பட்டி, பூம்பாறை, மன்னவனூா், குண்டுபட்டி, கூக்கால், பழம்புத்தூா், புதுப்புத்தூா், கும்பூா், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.
இந்தப் பகுதிகளில் கடந்த அக்டோபா் மாதம் மழை பெய்யாததால் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் கருக தொடங்கின. தற்போது, இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், சாகுபடி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளன.
Advertisement
Advertisement
மேலும், விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட் செடிகளின் பாத்திகளில் உரமிடுதல், களையெடுத்தல், மண் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.