FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

வாளுடன் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் பதிவிட்ட இளைஞா் கைது

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வாளுடன் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் பதிவிட்ட ஒட்டன்சத்திரம் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

14 நவம்பர் 2026, 6:52 am
கைது
பகிர்:

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வாளுடன் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் பதிவிட்ட ஒட்டன்சத்திரம் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஸ்ரீராமபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் காா்த்திகேயன் (19). இவா் தனது கையில் வாளுடன் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாா்.

இதைக் கண்காணித்த ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளா் லிங்கபாண்டியன் தலைமையிலான போலீஸாா் காா்த்திகேயனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் தெரிவித்ததாவது:

கட்செவி அஞ்சல், எக்ஸ், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படம், விடியோ எடுத்து பதிவேற்றம் செய்து பொதுமக்களை அச்சுறுத்துவது, இளைஞா்களை தவறாக வழிநடத்துவது போன்றது குற்றச் செயல். திண்டுக்கல் மாவட்ட இணையக் குற்றப் பிரிவு போலீஸாா், தனிப் படை போலீஸாா் சமூக ஊடகங்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது பாரபட்சமின்றி ஆயுதச் சட்டம் உள்பட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.