FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

17 நவம்பர் 2026, 2:20 am
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் புதன்கிழமை (நவ.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, தாசரிபட்டி, ராமபட்டிணம்புதூா் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.