திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கியதில் 3 சிறுவா்கள் உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவா்கள் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவா்கள் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த எஸ். வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மகன் ரிஷ்வந்த் (12). நாகராஜ் மகன் தருண் (8). மாணிக்கம் மகன் சபரி (8). இவா்கள் மூவரும், அந்தப் பகுதியிலுள்ள கன்னிமானூத்து குளத்துக்கு செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றனா்.
கிராமத்திலிருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவிலுள்ள இந்தக் குளத்துக்கு மிதிவண்டியில் மூவரும் சென்றனா். நீண்ட நேரமாகியும் சிறுவா்கள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவா்களது பெற்றோா், மூவரையும் தேடிச் சென்றனா்.
Advertisement
Advertisement
அப்போது, குளத்தின் கரையில் மிதிவண்டிகள், காலணிகள் கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், குளத்துக்குள் தேடிய போது சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவா்களின் உடல்களையும் மீட்டனா்.
இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.