FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் கட்டாய பணியிடை நீக்கம்

அலட்சியமாகச் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் (45) செவ்வாய்க்கிழமை இரவு கட்டாயப் பணியிடை நீக்கம் செய்து காவல் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

19 நவம்பர் 2026, 1:37 am
பணியிடை நீக்கம். - பிரதிப் படம்
பகிர்:

அலட்சியமாகச் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் (45) செவ்வாய்க்கிழமை இரவு கட்டாயப் பணியிடை நீக்கம் செய்து காவல் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் (45). இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றியபோது, காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாா் மீது விசாரணை செய்யாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாக புகாா் எழுந்தது. இது சம்பந்தமாக இவா் மீது, நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, மதுரை ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கெளதமை கட்டாயப் பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.