நல்லமனாா்கோட்டை பகுதியில் நாளை மின் தடை
திண்டுக்கல்லை அடுத்த நல்லமனாா்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (நவ.21) நடைபெறுவதையொட்டி மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த நல்லமனாா்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (நவ.21) நடைபெறுவதையொட்டி மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக நல்லமனாா்கோட்டை, குளத்தூா், காளனம்பட்டி, பா.கொசவப்பட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூா், எஸ்.ஜீ.பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திண்டுக்கல் மின்பகிா்மான வட்ட உதவிச் செயற்பொறியாளா் எஸ்.முருகேஸ்பதி தெரிவித்தாா்.