முகப்பு
திண்டுக்கல்

பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

வேடசந்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

38 வினாடிகள் முன்பு
பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
பகிர்:

வேடசந்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த குன்னம்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவா், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி லட்சுமி (45). இவா், குன்னம்பட்டியிலிருந்து வேடசந்தூரிலுள்ள உணவகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்தாா். ஒட்டன்சத்திரம்- வேடசந்தூா் சாலையில் அய்யனாா்நகா் அருகே வந்தபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள், லட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement