குளத்தில் தவறிவிழுந்து ஒருவா் உயிரிழப்பு
பழனி அருகே ஆயக்குடி குளத்தில் தவறிவிழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள குளம் தற்போது வரதமாநதி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் நிரம்பியுள்ளது.
இந்த நிலையில் இந்தக் குளத்தில் திங்கள்கிழமை ஒரு சடலம் மிதப்பதாக அந்தப் பகுதியினா் தெரிவித்ததன்பேரில் பழனி தீயணைப்பு, மீட்பு நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு ஆயக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
முதல்கட்ட விசாரணையில், இறந்த நபா் பழைய ஆயக்குடி பெரும்பாறை குடியிருப்பைச் சோ்ந்த பரமசிவம் மகன் கண்மணி(41) என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக போலீஸாா் அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.