கொடைக்கானலில் நாளை மின் தடை

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் வருகிற புதன்கிழமை (நவ. 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூா், குண்டுபட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல். ஷெட், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி. பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக்காடு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 25) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய செயற்பொறியாளா் தெரிவித்தாா்.