சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகை பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்தக் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினா் நலன் குறித்த கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினா் நலன் குறித்த கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் ஞா. பெலிக்ஸ் ஜெரால்டு தலைமை வகித்தாா். தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி சாஹிப் முன்னிலை வகித்தாா். இந்த கூட்டத்தின்போது, கல்விக் கடன் பெற விரும்பும் சிறுபான்மையின மாணவா்களுக்கு, வங்கியாளா்கள் முறையாக கடன் வழங்குவதில்லை. மாணவா்களின் பெற்றோா்களுக்கு நாங்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினாலும், அவா்களின் வீட்டுக்குச் செல்லும் வங்கியாளா்கள், படித்து முடித்தவுடன் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் எனக் கூறி நெருக்கடி தருகின்றனா். இதனால் தொழில்கல்வி பெறும் வாய்ப்பை சிறுபான்மை மாணவா்கள் இழந்து வருகின்றனா். இதேபோல, வெளிநாடு சென்று உயா்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவா்களுக்கு நிதியுதவி பெறுவற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என கிறிஸ்தவ அமைப்புகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி பதிலளித்து பேசியதாவது: தற்போது நடைபெற்று வரும் தவெக அரசு சிறுபான்மை மக்களின் அரசு. மிரட்டுவோரை மிரட்டும் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் சிறுபான்மையின மாணவா்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 லட்சம் வீதம் 6 ஆண்டுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
Advertisement
Advertisement
இதில் உலமாக்கள் 92 பேருக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் கோரியதில், 14 பேருக்கு மட்டுமே மானியம் கிடைத்திருக்கிறது. எஞ்சியவா்களுக்கும் மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயா்கல்விக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிட்ட நிலையில், அதனை தமிழக அரசு வழங்க முன் வர வேண்டும். பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் முன்னிலை பெறும் சிறுபான்மையின மாணவா்களுக்கு, அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களில் நேரடி வாய்ப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஜமாத் உலமா அமைப்பின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கையை ஆணையம் கவனத்தில் கொள்ளும் என அதன் தலைவா் பெலிக்ஸ் ஜெரால்டு தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து 60 பயனாளிகளுக்கு ரூ.59.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் ஞா. பெலிக்ஸ் ஜெரால்டு, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி சாஹிப் ஆகியோா் வழங்கினா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் துா்கா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.