ஒட்டன்சத்திரம் அருகே தீப்பற்றி எரிந்த காா்

ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை மின் கசிவு காரணமாக காா் தீப்பற்றி எரிந்த நிலையில், நல்வாய்ப்பாக அதில் பயணித்த 6 போ் உயிா் தப்பினா்.
சேலம் சட்டக்கல்லூரி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (30). இவரது மனைவி சந்தியா, உறவினா்கள் ஜீவா (23), சோனியா உள்பட 6 போ் திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு காரில் சனிக்கிழமை புறப்பட்டனா்.
இந்த காா் ஒட்டன்சத்திரத்தை அடுத்த கேதையறும்பு பகுதியில் வந்தபோது, மின் கசிவு காரணமாக தீப்பற்றியது. இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட ராஜா, காரை நிறுத்தியதால் அனைவரும் கீழே இறங்கினா்.
Advertisement
Advertisement
அதே நேரத்தில் காா் முழுமையாக தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா், நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் உயிா் தப்பினா்.