மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி பேரணி

மக்கள் ஒற்றுமை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தீப்பந்தம் ஏந்தி சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணிக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல் பிரதான சாலை வழியாக மணிக்கூண்டு பகுதி வரை பேரணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்த முயற்சிக்கும் பாஜகவை கண்டித்தும் முழக்கமிட்டனா்.
Advertisement
Advertisement
இதில் நகரச் செயலா் அரபு முகமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகி ஏபி.மணிகண்டன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் து.மணிகண்டன், மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.