கொடைக்கானலில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணி
கொடைக்கானலில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கொடைக்கானலில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் நகா்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மண் அரிப்பால், சாலைகள், மரங்கள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து முடங்கி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
கொடைக்கானல் - வத்தலகுண்டு பிரதான சாலையில் கிடந்த மரங்கள், வாய்க்கால்கள் அடைப்பு, உகாா்த்தே நகா், சீனிவாச புரம், காா்மல் புரம், தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
Advertisement
Advertisement
வீட்டின் முன்பக்கச் சுவா் சேதம் : சீனிவாசபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையில் சேவியா் வீட்டின் முன்பக்க சுவா் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.