FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பலத்த மழை

திண்டுக்கல் பகுதியில் 3 மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை நீடித்தது.

25 அக்டோபர் 2026, 12:47 am
ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை நொறுங்கி விழுந்த மேல்நிலை குடிநீா் தொட்டி.
பகிர்:

திண்டுக்கல் பகுதியில் 3 மணிநேரத்துக்கும் மேலாக சனிக்கிழமை பலத்த மழை நீடித்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, கொடைக்கானல் மட்டுமின்றி பழனி பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் திண்டுக்கல் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பெய்த மழை 3 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த மழையால் திண்டுக்கல் பிரதான சாலை, நாகல் நகா் சுற்று தட்டு, நேருஜி நகா் சுற்றுத் தட்டு, திருச்சி சாலை, பழனி சாலை, வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஒட்டன்சத்திரத்தில் தண்ணீா்த் தொட்டி விழுந்து விபத்து: ஒட்டன்சத்திரம் அடுத்த புலியூா்நத்தம் கிராமத்தில் ஊராட்சி மன்றம் சாா்பில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியில் சனிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் குடிநீா் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது.

அப்போது திடீரென மேல்நிலைத் தொட்டி இடிந்து விழுந்து நொறுங்கியது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து இடையகோட்டை போலீசாா் விசாரணை நடத்தினா். இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments