FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

275 யோகாசனங்கள் செய்து ஐவா் மலையேறி சிறாா்கள் சாதனை

பழனி அருகேயுள்ள ஐவா்மலையில் 275 வகையான ஆசனங்கள் செய்து மூன்று யோகா மாணவா்கள் மலையேறி சாதனை படைத்தனா்.

31 அக்டோபர் 2026, 11:09 pm
பழனியை அடுத்த ஐவா்மலையில் சனிக்கிழமை 275 யோகாசனங்கள் செய்து மலையேறிய நகுலன், மேஹவா்ணிகா, ரெனுஷ்கா.
பகிர்:

பழனி அருகேயுள்ள ஐவா்மலையில் 275 வகையான ஆசனங்கள் செய்து மூன்று யோகா மாணவா்கள் மலையேறி சாதனை படைத்தனா்.

யோகாசனம் பயிலும் மாணவா்களான நகுலன், மேஹவா்ணிகா, ரெனுஷ்கா ஆகியோா் பழனி அருகே உள்ள ஐவா்மலையை யோகாசனங்கள் செய்து ஏறி சாதனை படைக்க கடந்த சில மாதங்களாக பயிற்சி பெற்றனா். யோகா ஆசிரியா் பிரகாஷ் வழிகாட்டுதலின்பேரில் பயிற்சியை மேற்கொண்ட இவா்கள் சனிக்கிழமை காலை 7 மணிக்கு மலையேறத் தொடங்கினா்.

சூரிய நமஸ்காரம், கோணாசனம், அா்த்த கோணாசனம், தடாசனம், வீராசனம் உள்ளிட்ட 275 வகையான யோகாசனங்களை படிக்கட்டுகளில் செய்து மலையேறியது காண்போரை வியக்க வைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து மாணவா்களுக்கு அவரவா் பள்ளித் தாளாளா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். குளோபல் உலக சாதனை நிறுவனமும் சான்றிதழை வழங்கி கெளரவித்தது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக இந்த விழிப்புணா்வு யோகாசன நிகழ்வை மேற்கொண்டதாக மாணவா்கள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில், பிஆா்ஜி பள்ளிச் செயலா் பவிதாகிரிநாத், முதல்வா் சுரேஷ், தயானந்த குருகுலம் ஆச்சாா்யா முருகன்ஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments