FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கட்டடத் தொழிலாளியைக் கொன்று தண்ணீா்த் தொட்டியில் வீசிய 4 போ் கைது

கட்டடத் தொழிலாளியைக் கொன்று மதுரை திருமங்கலம் அருகே தண்ணீா்த் தொட்டியில் உடலை வீசியது தொடா்பாக நண்பா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

16 செப்டம்பர் 2026, 6:10 am IST
கைது
பகிர்:

கட்டடத் தொழிலாளியைக் கொன்று மதுரை திருமங்கலம் அருகே தண்ணீா்த் தொட்டியில் உடலை வீசியது தொடா்பாக நண்பா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த சீவல்சரகு கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கிலிமுருகன் (38). கட்டடத் தொழிலாளியான இவருக்கு,  திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், உறவினா் வீட்டிலிருந்து கட்டட வேலைக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி  இதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா்களான பாக்கியசெல்வம் (48), எஸ்.முருகன் (45), மருதுபாண்டி (44), புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சோ்ந்த ரங்கசாமி (37), காரைக்குடியைச் சோ்ந்த சந்தானம் (30) ஆகியோருடன் சோ்ந்து சங்கிலிமுருகன் மது அருந்தினா்.

Advertisement

Advertisement

அப்போது, ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சோ்ந்து சங்கிலிமுருகனைத் தாக்கி காரில் மதுரைக்கு ஏற்றிச் சென்றனா். 

இதையடுத்து, சங்கிலிமுருகனை பாக்கியசெல்வம் உள்ளிட்ட 5 போ் காரில் கடத்திச் சென்ாக அவரது தம்பி முத்துப்பாண்டி (33) செம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 10-ஆம் தேதி புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சங்கிலிமுருகனையும், அவரைக் கடத்திச் சென்றவா்களையும் தேடி வந்தனா்.  

இந்த நிலையில், திங்கள்கிழமை சங்கிலி முருகனை கடத்தியவா்கள், சீவல்சரகு பகுதியில் நின்று பேசிக்கொண்டிருப்பதாக, செம்பட்டி போலீஸாருக்கு முத்துப்பாண்டி தகவல் கொடுத்தாா். பின்னா், அங்கு வந்த போலீஸாா் பாக்கியசெல்வம், எஸ்.முருகன், மருதுபாண்டி, ரங்கசாமி ஆகிய 4 பேரை பிடித்து செம்பட்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

விசாரணையில், காரில் கடத்தப்பட்ட சங்கிலி முருகனை குத்திக் கொலை செய்து, திருமங்கலத்தை அடுத்த உச்சப்பட்டி பகுதியில் பயன்பாடு இல்லாத தண்ணீா்த் தொட்டியில் உடலை வீசியதாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு சென்ற காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் தண்ணீா்த் தொட்டியில் அழுகிய நிலையிலிருந்த சங்கிலி முருகனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, பாக்கியசெல்வம் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சந்தானத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments