எரியோடு அருகே 3 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்
எரியோடு அருகே குளத்தில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
எரியோடு அருகே குளத்தில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நீா்நிலைகளில் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு, மாநில நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய மாணவா் படை, எக்ஸ்னோரா, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தினமணி நாளிதழ் இணைந்து இந்த பணிகளை முன்னெடுத்து நடத்துகின்றன.
இதன்படி, திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த சித்தூா் குளத்தில் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தன்னாா்வலா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு குருதிக் கொடை ஒருங்கிணைப்பாளா்கள் நலச் சங்கம் சாா்பில் குழந்தைவேலு இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். சித்தூா் குளத்தில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்தப் பணியில் வேடசந்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிநாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், வேடசந்தூா் அரிமா சங்கம், திண்டுக்கல் சிகரம் அரிமா சங்கம், சத்யம் ஐபிஎஸ் சமூக நல அகாதெமி உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.