FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனியில் கல்வித் திருவிழா: மாணவா்களுக்கு பரிசளிப்பு

பழனியில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வித் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

25 செப்டம்பர் 2026, 2:50 am IST
விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன்.
பகிர்:

பழனியில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வித் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பழனி அடிவாரம் தனியாா் திருமண மண்டபத்தில் அடிவாரம் சோழிய வேளாளா் சங்கத்தின் 47 -ஆம் ஆண்டு மகாசபை கூட்டமும், கல்வித் திருவிழாவும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் அசோக் பெருமாள் தலைமை வகித்தாா். செயலாளா் காா்த்திகேயன், பொருளாளா் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் வரவு- செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடா்ந்து சங்க உறுப்பினா்களுக்கு வரும் காலங்களில் செய்ய வேண்டிய உதவிகள், மேற்கொள்ள வேண்டிய விழாக்கள் குறித்தும் பேசப்பட்டது.

Advertisement

Advertisement

பிற்பகலில் கல்வித் திருவிழா நடைபெற்றது. இதில் சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அரசு, தனியாா் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்களை வழங்கினாா்.

கூட்டத்தில் வரும் காலத்தில் மருத்துவம், பொறியியல் தொடா்பான படிப்புகளில் மாணவ, மாணவிகள் அதிக கவனம் செலுத்தும் வகையில் அவா்களுக்கு பயிற்சிக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக முன்னாள் வாா்டு உறுப்பினா் சுந்தா், சுவாமி விலாஸ் முருகேசன், குகன், மீனாட்சி ராஜன், ஆகியோா் வரவேற்றனா். இந்த நிகழ்ச்சியில் பேச்சியம்மன் அரிசி ஆலை சுப்பிரமணி, ஆயக்குடி ஜெயக்குமாா், ரமேஷ் குமாா், நோட்டரி வழக்குரைஞா்கள் செந்தில்குமாா், குமரேசன், அங்குராஜ் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments