மது போதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது
வடமதுரை அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வடமதுரை அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த பி. கொசவப்பட்டி சிக்குபோலகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவரது மகன் முத்தையா (30). கூலித் தொழிலாளியான இவா், நந்தினி என்பவரை காதல் திருமணம் செய்தாா். இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். மது அருந்தும் பழக்கத்தால், முத்தையா தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா்.
இதனால் மனமுடைந்த நந்தினி, குழந்தைகளுடன் சில மாதங்களுக்கு முன் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். கடந்த 4 நாள்களுக்கு முன் மனைவியுடன் சமாதானம் பேசிய முத்தையா, குழந்தைகளுடன் தனது வீட்டுக்கு அழைத்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்த அவா் தனது மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கினாா். இதையடுத்து, நந்தினி அருகிலுள்ள வீட்டில் தஞ்சமடைந்தாா். இதற்காக முத்தையாவை அவரது தந்தை பெருமாள் கண்டித்தாா். இதில் ஆத்திரமடைந்த முத்தையா கட்டையால் தாக்கியதில் பெருமாள் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதனிடையே தனது மனைவி நந்தினி, தந்தை பெருமாளை தாக்கியதாக போலீஸாரிடம் முத்தையா தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
ஆனால் வடமதுரை போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுபோதையில் முத்தையாவே தனது தந்தையை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்தையாவை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.