தி சென்னை சில்க்ஸ் கிளை மதுரையில் நாளை தொடக்கம்
தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி கிளைகள் மதுரையில் 16-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகின்றன.
தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி கிளைகள் மதுரையில் 16-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகின்றன.
இதுகுறித்து தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான டி.கே.சந்திரன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆடைகளை வழங்கிவரும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 16ஆவது கிளை மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தங்கம் தியேட்டர் இருந்த இடத்தில் தொடங்கப்படுகிறது. ஜவுளிகள் சில்லறை விற்பனையுடன், மொத்த விற்பனைப் பிரிவும் தொடங்கப்படுகிறது. கல்யாண சீர்வரிசைப் பட்டுப்புடவைகள், சிறுவர், சிறுமியருக்கான ஆடைகள், இளைஞர்களுக்கான ஆடைகள் என குறைந்த விலையில் கிடைக்கும். வாகன நிறுத்த வசதி உள்ளது. செப்.16 முதல் 22 வரை அனைத்து ஆடைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், தரமான தங்கம் விற்பனையும் தொடங்கப்படுகிறது. வரும் 22ஆம் தேதி வரை பவுனுக்கு ரூ.1,000 தள்ளுபடி அளிக்கப்படும். மேலும், கல்வி, மருத்துவச் சேவையிலும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றார்.
Advertisement
Advertisement
முன்னதாக, தி சென்னை சில்க்ஸ் சார்பில் மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில், கள்ளழகர் ஆற்றில் இறங்குதல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி ஆகியோர் உருவம் பொறித்த பட்டுச்சேலைகள், ரூ.8 லட்சம் மதிப்புள்ள கல் பதித்த பட்டுச்சேலைகளை அறிமுகப்படுத்தப்பட்டது. பேட்டியின் போது, நிறுவன முதுநிலை மேலாளர் திருமூர்த்தி, மேலாளர் சண்முகம், பொதுமேலாளர் கணேஷ் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.