வருவாய்த்துறை பணிமாறுதலுக்கு கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்
வருவாய்த்துறையில் உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு
வருவாய்த்துறையில் உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையில் வழங்கப்படவேண்டும் என மதுரை மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன (குரூப் 2) அலுவலர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சங்கத்தின் சார்பில் புதிதாக பணியேற்றவர்களுக்கு வரவேற்பு, வட்டாட்சியர், துணை வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு, சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு என முப்பெரும் விழா மதுரை அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்க மதுரை மாவட்டத் தலைவர் சி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆர்.சையதுஅபுதாகீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருவாய்த்துறையில் உதவியாளர் முதல் வட்டாட்சியர்கள் வரையிலான பணியிட மாறுதலை கலந்தாய்வு முறையிலே நடத்தவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிதாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் சங்க மாநிலச் செயலர் துணை வட்டாட்சியர் வி.தர்மராஜ், மாநிலப் பொருளாளர் ரமேஷ்போஸ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். சங்க மாவட்டச் செயலர் ஏ.மணிகண்ட பிரபு வரவேற்றார். பொருளாளர் பிரேம்கிஷோர் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.