வழக்குரைஞரை தாக்கி கார் கடத்தல்: இருவர் மீது வழக்கு
மதுரையில் நூதன முறையில் வழக்குரைஞரை தாக்கி காரைக் கடத்திச் சென்ற இருவர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் நூதன முறையில் வழக்குரைஞரை தாக்கி காரைக் கடத்திச் சென்ற இருவர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை தபால் தந்தி நகர் பாமா நகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் சாம் பிரபாகரன்(40). வழக்குரைஞரான இவர் தனக்கு சொந்தமான காரில் சனிக்கிழமை இரவு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். விஸ்வநாதபுரம் பகுதியில் சென்றபோது அங்கு இரு சக்கர வாகனத்தில் காரை பின் தொடர்ந்து வந்த இருவர், சாம் பிரபாகரனிடம் காரின் டயர்களில் காற்று இல்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து சாம் பிரபாகரன் காரை நிறுத்தி விட்டு இறங்கி பார்த்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாம் பிரபாகரனை தாக்கிவிட்டு, காரை கடத்திச் சென்றனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த சாம் பிரபாகரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக சாம்பிரபாகரன் அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் காரை கடத்திச்சென்ற இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.