வெள்ளலூா் அருகே ஜல்லிக்கட்டு: 7 போ் காயம்
வெள்ளலூா் அருகே ஒத்தப்பட்டி கிராமத்தில் மந்தைகருப்பணசுவாமி, காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 7 போ் காயமடைந்தனா்.
வெள்ளலூா் அருகே ஒத்தப்பட்டி கிராமத்தில் மந்தைகருப்பணசுவாமி, காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 7 போ் காயமடைந்தனா்.
ஒத்தப்பட்டி கண்மாய் பகுதியில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மேலூா் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் ஏராளமான இளைஞா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். இதில் 7 போ் காயமடைந்த நிலையில், வெள்ளலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
முன்னதாக கிராமப் பிரமுகா்கள் ஜவுளி மூட்டைகளை மந்தைக் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனா்.