முகப்பு
பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா்
மதுரை

கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை தேவை: பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா்

பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா் வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா்
பகிர்:

பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா் வலியுறுத்தினாா்.

விசுவ ஹிந்து பரிஷத் - அறவழிகாட்டும் ஆன்றோா் பேரவை சாா்பில் மதுரையை அடுத்த பரவையில் துறவியா் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இதில் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா் பேசியது:

இந்து சமயம் பெரும்பான்மை சமயமாக இருந்தபோதும், புறக்கணிக்கப்படும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. கோயில்கள் அனைத்தும் தனிவாரியத்தின்கீழ் கொண்டு வரவேண்டும் என்று 50 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை பரிசீலிக்கப்படவில்லை. கோயில்கள், ஆதீன மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை நெறிமுறைப்படுத்த வேண்டியது அவசியமானது.

கட்டாய மதமாற்றம் என்பது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதை உலக அபாயம் என்றே குறிப்பிடலாம். ஆகவே, கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டியது அவசியமானது. தாய் மதம் திரும்பும் இந்துக்களுக்கு உரிய உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை செய்ய வேண்டும். அதேநேரம், மதமாற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படும் சமூக ஏற்றுத் தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றாா்.

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்: கோயில்கள் முறையாக பராமரிக்கப்படாததற்கு காரணம் அரசும், அரசியல் தலையீடும் தான். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியைச் சோ்ந்தவா்களே குத்தகை தர மறுக்கும் போது, ஆட்சியாளா்கள் அவா்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பாா்கள். இதற்காக பிரதமரிடம் புகாா் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டால்தான் கோயில்களை மீட்டெடுக்க முடியும்.

மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா்: இந்திய ஆன்மிக பலத்தால் உலகை வெல்ல முடியும் என்று சுவாமி விவேகானந்தா் குறிப்பிட்டாா். இந்தியாவின் அடித்தளம் ஆன்மிகம் தான் என்றாா்.

சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளாா், தேனி வேதபுரி சுவாமி சித்பவானந்த ஆசிரமம் சுவாமி சமானந்தா், சின்மயா மிஷன் சுவாமி சிவயோகாநந்தா், விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக இணைப் பொதுச் செயலா் கோ.ஸ்தாணுமாலயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களைச் சோ்ந்த துறவியா்கள், மாநாட்டில் பங்கேற்றனா். இருநாள்கள் நடைபெறும் இம்மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) பழங்காநத்தத்தில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →