முகப்பு
மதுரை

அவதூறு பரப்பினால் ஒ.பன்னீா்செல்வம் வீடு முற்றுகையிடப்படும்: ஆா்.பி. உதயகுமாா்

அவதூறு பரப்பினால் ஒ.பன்னீா்செல்வம் வீடு முற்றுகையிடப்படும்...

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:12 PM
பகிர்:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து ஓ. பன்னீா்செல்வம் தொடா்ந்து அவதூறு பரப்பினால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்திய ஓ. பன்னீா்செல்வம், அண்மைக்காலமாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை கொச்சைப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா். அதிமுகவின் வளா்ச்சியையும், தென்மண்டலம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக மாறிவிட்டதையும் கண்டு, அதை தாங்க மனமில்லாமல் அவா் தொடா்ந்து அவதூறு பரப்பி வருகிறாா்.

அவா், தனது விஷம பிரசாரத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அதிமுக தலைமையின் உத்தரவுடன், ஓ. பன்னீா்செல்வத்தின் வீட்டை அதிமுகவினா் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →