FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தாா்.

22 வினாடிகள் முன்பு
பட்டாசு - பிரதிப் படம்
பகிர்:

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கும் சரவெடிகள் வெடிப்பதையும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதிக் காக்கப்படும் இடங்கள், குடிசைப் பகுதிகள் அருகில் பட்டாசுகள் வெடிப்பதையும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.