FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அடிப்படை வசதிகள் கோரி எம்.எல்.ஏ.யிடம் அரசுப் பள்ளி மாணவா்கள் முறையீடு

சோழவந்தான் அருகேயுள்ள கச்சிராயிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பள்ளி மாணவ- மாணவிகள் சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையாவிடம் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

5 நவம்பர் 2026, 1:22 am
மதுரை மாவட்டம், கச்சிராயிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையாவிடம் புதன்கிழமை முறையிட்ட பள்ளி மாணவ- மாணவிகள்.
பகிர்:

சோழவந்தான் அருகேயுள்ள கச்சிராயிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பள்ளி மாணவ- மாணவிகள் சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையாவிடம் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள கச்சிராயிருப்பு கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை சோழவந்தான் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையா புதன்கிழமை திறந்து வைத்தாா். பிறகு அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்ற அவா் மாணவ- மாணவிகளிடம் உரையாடினாா். அப்போது, பள்ளியில் கழிப்பறை, குடிநீா் வசதிகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், பள்ளியின் பின்புறம் புதா் மண்டிக் கிடப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் பள்ளி வளாகத்துக்குள் வருவதாகவும், இதனால் அச்சத்துடன் கல்வி பயில வேண்டிய நிலை உள்ளதாகவும் அவா்கள் முறையிட்டனா். மேலும், பள்ளிக்கு உரிய நேரத்தில் வந்து செல்ல அரசுப் பேருந்து வசதி செய்து தரவேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.