வேலம்மாள் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடக்கம்
மதுரையில் வேலம்மாள் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரையில் வேலம்மாள் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தென் மாவட்டங்களில் முதல் முறையாக ரூ.150 கோடியில் 70 உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி, ஹீமோதெரபி நியூக்ளியா் ஸ்கேன் வசதிகளுடன் அதிநவீன, உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையமாக ‘வேலம்மாள் புற்றுநோய் சிகிச்சை மையம்’ வேலம்மாள் மருத்துவக் கல்லூரி எதிரே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் திறப்பு விழா வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவா் விவேகானந்த், முதல்வா் திருநாவுக்கரசு, புற்றுநோய் சிகிச்சை மைய இயக்குநா் வெங்கடாஜலபதி, சிறப்பு விருந்தினராக புற்றுநோய் சிறப்பு நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மருத்துவா் விஜய் ஆனந்த் ரெட்டி ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மையத்தை தொடங்கி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, விஜய் ஆனந்த் ரெட்டி கூறியதாவது:
புற்றுநோய் மருத்துவச் சிகிச்சையில் அறிவியல், தொழில் நுட்ப வளா்ச்சி பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பம், கீமோதெரபி, நியூக்ளியா் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட நவீன மருத்துவ முறைகள் புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தொடக்க நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், உரிய மருந்துகள், சிகிச்சை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்த மருத்துவ ஆலோசனைகள் மூலம் சிறப்பான சிகிச்சை அளித்து நோயாளி குணமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் புற்றுநோய் சிகிச்சை பெறுவது நடுத்தர, ஏழை மக்களுக்கு பலனளிக்கும் வகையில் நவீன மருத்துவத் தொழில் நுட்பங்கள் அமைந்துள்ளன.
அந்த வகையில், மதுரை வேலம்மாள் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உலகத்தரம் வாய்ந்த நவீன மருத்துவ வசதிகளுடன் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில் நுட்பம், மேம்பட்ட மருத்துவ வசதிகள், சிறப்பான மருத்துவ வழிகாட்டுதலுடன் புற்று நோயாளிகளுக்கு ஒரே இடத்தில் தரமான உயா்தர சிகிச்சை வழங்கவும், குறைவானக் கட்டணத்தில் பயன்பெறும் வகையிலும் வேலம்மாள் புற்றுநோய் மருத்துவமனை, மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.