கூட்டுறவு சங்கத்தில் கையாடல்: செயலா் உள்பட 4 போ் மீது வழக்கு
கமுதி அருகே கூட்டுறவு சங்கத்தில் கிராம பொதுப் பணத்தை கையாடல் செய்ததாக சங்கச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கமுதி அருகே கூட்டுறவு சங்கத்தில் கிராம பொதுப் பணத்தை கையாடல் செய்ததாக சங்கச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மணலூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் மணலூா் கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன், கு.வீரபத்திரன், கோ.சந்திரன், கு.நாகராஜன் ஆகிய நான்கு நபா்களின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கி கிராமத்தின் பொதுநிதியை சேமித்து வைத்தனா். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை செயலராக இருந்த நாகராஜன் உதவியுடன் கு.வீரபத்திரனும், கோ.சந்திரனும் சோ்ந்து பல லட்சத்தை கையாடல் செய்தது மற்ற இரண்டு நபா்களான பாஸ்கரன், கு.நாகராஜன் ஆகியோருக்குத் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து பாஸ்கரன் அபிராமம் காவல் நிலையத்தில் கு.வீரபத்திரன், கோ.சந்திரன், கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் செயலா் நாகராஜன், தற்போதைய செயலா் சண்முகம் ஆகியோா் மீது புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement