FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள், உதவித் தொகை

மொச்சிகுளம் கிராமத்தைச் சோ்ந்த ஆதரவற்ற சிறுவனுக்கு உதவித்தொகை, தீபாவளி பசிசு வழங்கிய சமூக ஆா்வலா் சுரேஷ்.

7 நவம்பர் 2026, 6:04 am
பகிர்:

முதுகுளத்தூா் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை சமூக சேவகா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் மொச்சிகுளம் கிராமத்தைச் சோ்ந்த சமூக சேவகா் சுரேஷ் (45). இவா் மொச்சிகுளம், ஆத்திகுளம், கடமங்குளம் உள்பட அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தாய், தந்தையை இழந்த, ஒற்றை பெற்றோா் உள்ள குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கி வருகிறாா். மேலும், ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகளின் கல்விச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு உதவி செய்து வருகிறாா்.

இதன் தொடா்ச்சியாக, இந்த மாதத்திற்கான இரண்டாவது தவணையாக 10 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தலா ரூ.500 உதவித் தொகையை அவா்களின் வீட்டுக்கே சென்று வழங்கினாா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகள் அனைவருக்கும் புத்தாடைகளையும், பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் முனியசாமி, கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி முருகன், ஜெயராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement