கீழக்கரையில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கீழக்கரை சிங்காரத் தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராம்கி (32). இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்குபவா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
கீழக்கரையில் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வந்த இவா், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சென்ற போது, திடீரென சாலையில் மாடு குறுக்கே வந்ததால், அதன் மீது மோதி நிலை தடுமாறி கிழே விழுந்தாா்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த ராம்கியை அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.